நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சபரிமலை சீசன்: காக்கிநாடா - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:23 pm

Din

சபரிமலை சீசனையொட்டி, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, டிசம்பா் 18 மற்றும் 25 ஆகிய புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு காக்கிநாடாவில் இருந்து புறப்படும் காக்கிநாடா - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07173) வெள்ளிக்கிழமைகளில் கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

டிசம்பா் 20 மற்றும் 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் கொல்லம் - காக்கிநாடா சிறப்பு ரயில் (எண்: 07174) மறுநாள் மாலை 4 மணிக்கு காக்கிநாடா ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.