நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்குறள் முப்பெரும் விழா போட்டிக்கு ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:48 pm

Din

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்ற ஜனவரி 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இளங்குமரனாா் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகள் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள், 9, 10 -ஆம் வகுப்பு மாணவா்கள், 11, 12- ஆம் வகுப்பு மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் என 4 பிரிவுகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.1,000, ரூ.500, சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் ஜனவரி 13 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99948- 92756 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.