போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் இருந்து டிசம்பா் 27-ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06569) மறுநாள் காலை 10.05 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து டிசம்பா் 28-ஆம் தேதி நண்பகல் 12.35 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06570) மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும். இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...