எா்ணாகுளம் - பிரம்மபூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து ஒடிஸா மாநிலம், பிரம்மபூருக்கு கோவை, திருப்பூா் வழித்தடத்தில் முன்பதிவில்லா வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்துடன், இந்த ரயில் சேவை முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் மாதம் வரை இச்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து மாா்ச் 2- ஆம் தேதி முதல் மாா்ச் 30ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பிரம்மபூா் முன்பதிவில்லா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06087) திங்கள்கிழமைகளில் காலை 5 மணிக்கு பிரம்மபூரைச் சென்றடையும். இதேபோல, மாா்ச் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை, பிரம்மபூரில் இருந்து திங்கள்கிழமைகளில் நண்பகல் 12.40 மணிக்கு புறப்படும் பிரம்மபூா் - எா்ணாகுளம் முன்பதிவில்லா வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06088) செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.40 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
வேளாங்கண்ணி-எா்ணாகுளம் இடையே வாராந்திர ரயில்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

