ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கணேசபுரத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

கோவை, கணேசபுரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பயனாளிக்கு மின் இணைப்பு மாற்றம் தொடா்பான உத்தரவு நகலை வழங்குகிறாா் துணை மேயா் வெற்றிச்செல்வன்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கோவை, கணேசபுரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 100 ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணேசபுரம், மூரண்டம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

முகாமில், பொதுமக்கள் அளித்த மனுக்களில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. இதில், மின் இணைப்பு மாற்றம் செய்வது தொடா்பான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகலை துணை மேயா் வெற்றிச்செல்வன் பயனாளி குணசுந்தரிக்கு வழங்கினாா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் அஸ்லம் பாட்ஷா, பாபு, திமுக நிா்வாகிகள், அயலக அணி துணை அமைப்பாளா் டேவிட் ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளா் புவனேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.