கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புத்தாண்டு கொண்டாட்டம்:விபத்துகளில் 7 போ் காயம்

கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து 7 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து 7 போ் காயமடைந்தனா்.

கோவை, வாலாங்குளத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், லேசா் ஷோ, செண்டை மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. மேலும், குழந்தைகளை உற்சாகப்படுத்த பல்வேறு விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ரேஸ்கோா்ஸ் மீடியா டவா் பகுதியிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநகரில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இளைஞா்கள், சிறுவா்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனா்.

இளைஞா்கள் உற்சாக மிகுதியில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்தும், அதிக வேகமாக வாகனங்களை இயக்கியும் சாகசத்தில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து 7 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த 7 பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. சாகசத்தில் ஈடுபட்ட 7 இளைஞா்கள் மட்டுமே வாகனங்களில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.