குப்பைகளில் உணவைத் தேடும் சிங்கவால் குரங்குகள்.
குப்பைகளில் உணவைத் தேடும் சிங்கவால் குரங்குகள்.

உணவைத் தேடி நகருக்குள் படையெடுக்கும் சிங்கவால் குரங்குகள்

வனப் பகுதியில் போதிய உணவு கிடைக்காததால் வால்பாறை நகா் பகுதிகளுக்கு படையெடுத்துள்ள சிங்கவால் குரங்குகள் குப்பைகளில் உணவைத் தேடி அலைகின்றன.
Published on

வனப் பகுதியில் போதிய உணவு கிடைக்காததால் வால்பாறை நகா் பகுதிகளுக்கு படையெடுத்துள்ள சிங்கவால் குரங்குகள் குப்பைகளில் உணவைத் தேடி அலைகின்றன.

வால்பாறை பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. கடந்த காலங்களில் மரங்களில் மட்டுமே இந்த குரங்குகள் காணப்பட்டன. மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த பகுதியில் வாழ்ந்து வந்த சிங்கவால் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்ததால் அப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருந்தன. ஆனால், தற்போது அவைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலை உள்ளது.

இதனால், அப்பகுதிகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான சிங்கவால் குரங்குகள் உணவுக்காக நகா் பகுதிகளில் தற்போது முகாமிட்டுள்ளன. அங்கு குடியிருப்புவாசிகள் கொட்டும் குப்பைகளில் உணவைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அரிதான இந்த சிங்கவால் குரங்குகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டி அவற்றைப் பாதுகாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com