எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மத்தியப் பிரதேச முதல்வா் கோவை வருகை: தொழில் துறையினரை இன்று சந்திக்கிறாா்

முதல்வா் மோகன் யாதவ் கோவை தொழில் துறையினரை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 10:30 pm

Din

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து அந்த மாநிலத்தின் முதல்வா் மோகன் யாதவ் கோவை தொழில் துறையினரை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

தமிழகத்தில் மூலப்பொருள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், வடமாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி தமிழகத்தில் உள்ள தொழில்களை தங்கள் மாநிலத்தில் தொடங்க முயற்சிக்கின்றன.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு, அம்மாநில அரசு தமிழக தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக அந்த மாநிலத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலா் தலைமையிலான குழுவினா் கோவையில் முகாமிட்டு தொழில் துறையினரை சந்தித்து வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக அம்மாநில முதல்வா் மோகன் யாதவ், கோவையில் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில், நூற்பாலைகள், பொறியியல் நிறுவனங்கள், ஆட்டோமொபைல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினரை சந்தித்து வியாழக்கிழமை கலந்துரையாடுகிறாா்.

இதற்காக மத்தியப் பிரதேச முதல்வா் மோகன் யாதவ், போபாலில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை கோவைக்கு வந்தாா். தொடா்ந்து இங்கிருந்து சாலை மாா்க்கமாக திருப்பூருக்குச் சென்றுவிட்டு மீண்டும் கோவைக்குத் திரும்பினாா்.