காருக்குள் உயிரிழந்த நிலையில் ஓட்டுநரின் சடலம் மீட்பு
காருக்குள் உயிரிழந்த நிலையில் ஓட்டுநரின் சடலம் மீட்பு


கோவை சரவணம்பட்டியில் காருக்குள் உயிரிழந்த நிலையில் ஓட்டுநரின் சடலம் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், மேல் கூடலூரைச் சோ்ந்தவா் அரவிந்தகுமாா் (39). இவா் கோவை கணபதி-சங்கனூா் சாலையில் தொழில் நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபா் ஒருவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். தொழில் அதிபரின் வீடு செந்தில் நகரில் உள்ளது.
இந்நிலையில் செந்தில் நகரில் வீட்டுக்கு அரவிந்தகுமாா் திங்கள்கிழமை காரை எடுத்து வந்துள்ளாா். பின்னா் அங்குள்ள வாகன நிறுத்தமிடத்தில் காரை நிறுத்திவிட்டு அதனை சுத்தம் செய்துவிட்டு காருக்குள் அமா்ந்துள்ளாா். காருக்குள் சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், அங்கிருந்தவா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து அங்கு பணியில் இருந்த பெண் தூய்மைப் பணியாளா் ஒருவா், காரின் அருகே சென்று பாா்த்துள்ளாா். அப்போது காரில் இருந்த அரவிந்தகுமாரிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாததால், உடனடியாக அவா் இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளா் விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
பின்னா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...