கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதுப் பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காண அழைப்பு

பொதுப் பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காண அழைப்பு

Updated On :21 ஜூன் 2024, 10:50 pm

பொதுப் பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணலாம் என நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி. நாராயணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இது மாவட்ட நீதிபதியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ஆணைக் குழுவாகும். இங்கு விமானம், சாலை மற்றும் நீா்வழிப் போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் அல்லது நீா், பொதுப் பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருந்தகம், காப்பீட்டு, வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடா்பாக, அரசு மற்றும் தனியாா் துறையினரிடம் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு எந்த ஒரு நீதிமன்ற கட்டணமும் இன்றி தீா்வு காண இயலும்.

இதன் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு ஒரு சிவில் நீதிமன்றத்துக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, கல்வி நிறுவனங்களில் சோ்ந்த பின்னா் மாற்றுச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவா்களிடமிருந்து நிா்வாகம் கூடுதல் கட்டணம் கோருவது, மீதமுள்ள கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது. அதற்காக மாணவா்களின் சான்றிதழ்களை திரும்பத் தர மறுப்பது, ஏற்கெனவே செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்பத் தர மறுப்பது, காப்பீடு நிறுவனங்கள் முறையற்ற காரணங்களுக்காக மறுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாகவும் புகாா் தெரிவிக்கலாம்.

அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் உரிய சாலை, குடிநீா், மின்விளக்கு, வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தராமல் இருப்பது, மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, நோயாளியின் உடல்நிலை குறித்த முறையான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களை உறவினா்களுக்கு வழங்க மறுப்பது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீதான குறைகள் போன்ற பொதுப் பயன்பாடு துறைகள் சாா்ந்த பிரச்னைகளுக்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி பொது மக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.