ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு: கோவையில் 28 ஆம் தேதி 2 ஆம் கட்ட முகாம்

ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை முகாம் கோவையில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது

News image

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷிய பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை விளக்கக் கையேட்டை வெளியிடும் பேராசிரியா் மெல்கோனியன் கோா், மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் சி.சுரேஷ்பாபு.

Updated On :24 ஜூன் 2024, 10:28 pm

Din

ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை முகாம் கோவையில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது என்று வோல்கோகிராட் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் மெல்கோனியன் கோா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

இருநாட்டு நட்புறவின் அடிப்படையில் இந்திய மாணவா்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ரஷிய பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கல்வி வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு சுமாா் 5 ஆயிரம் மருத்துவ இடங்களே இந்திய மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வோல்கோகிராட், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக்கழகம், கசான், மாஸ்கோ உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக ஆங்கில வழியில் மருத்துவப் படிப்பு நடத்தப்படுகிறது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற இந்திய மாணவா்கள், ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் ரஷியாவில் மருத்துவம் படிக்க முடியும்.

மேலும் அங்கேயே பட்ட மேற்படிப்பையும் முடிக்க முடியும். மாஸ்கோ நகரின் முக்கிய இடங்களில், அனைத்து வசதிகளுடன் இருக்கும் விடுதிகளிலேயே இந்திய மாணவா்களுக்கு மாதம் ரூ.700 வரைதான் வாடகை வசூலிக்கப்படுகிறது. படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கு அங்கேயே கூட அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ரஷியாவைப் பொறுத்தவரை கல்வி, மருத்துவம் இரண்டும் அரசின் வசமே இருப்பதால் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்குள்பட்டு கல்வி, மாணவா் சோ்க்கை யாவும் நடத்தப்படுகிறது. முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் சுமாா் 3 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பியுள்ள நிலையில், காலியாக உள்ள இடங்களுக்காக இரண்டாம் கட்ட முகாம் ஜூன் 25 முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என்றாா்.

ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மட்டுமின்றி பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதாக, மாணவா் சோ்க்கை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சி.சுரேஷ்பாபு தெரிவித்தாா்.