மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநகராட்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியா்களுடன் ஆணையா் ஆலோசனை

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவா்களுக்கு புதிய பயிற்சிகள்: ஆணையா் ஆலோசனை

News image
‘கூடோ’ விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் வெண்கலம் வென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவா் பி.எஸ்.நளனை பாராட்டிய மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். உடன்,துணை ஆணையா் ச.செல்வசுரபி உள்ளிட்டோா்.
Updated On :25 ஜூன் 2024, 11:25 pm

Din

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்விசாா் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா்.

இதில், மாநகராட்சியில் உள்ள 148 பள்ளிகளில் மாணவா்களுக்கு பரதநாட்டியம், நுண்கலை பயிற்சி, இசைக் கருவிகள் வாசித்தல், ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி, உளவியல் பயிற்சி, நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குவது தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்கள், பள்ளி மேற்பாா்வையாளா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான ‘கூடோ’ தற்காப்புக் கலை போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் பெற்ற, அனுப்பா்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் பி.எம்.நளனை, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் செல்வசுரபி, மாநகர தலைமைப் பொறியாளா் அன்பழகன், உதவி ஆணையா்கள், மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.