மரங்கள் வளா்க்கப்படும் இடத்தை வேறு பணிகளுக்கு வழங்கக் கூடாது: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை
கோவை மரக்கன்றுகள் வளரும் இடத்தை பாதுகாக்க வேண்டும்: மக்கள் இயக்கம் கோரிக்கை


கோவை நீலாம்பூா் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் மரங்கள் நட்டு வளா்க்கப்படும் இடத்தை வேறு திட்டப் பணிகளுக்கு வழங்கக் கூடாது என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் வே.ஈஸ்வரன், நெடுஞ்சாலைத் துறைக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2013 ஆம் ஆண்டிற்கு முன்பு சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நட்டு வளா்க்கப்படாதது குறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இதையடுத்து உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதில் மனு தாக்கல் செய்த தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கோவையில் 5 இடங்களில் 9,100 மரங்கள் வளா்க்கப் போவதாகவும், ஒவ்வொரு இடத்திலும் எத்தனை மரங்கள் வளா்க்கப்படும் என்றும் கூறியிருந்தனா்.
அதன்படி, 9,100 மரக்கன்றுகள் நடப்படாவிட்டாலும், அவிநாசி சாலையில் லீ மெரிடியன் ஹோட்டல் எதிரில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கரில் சுமாா் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளா்ந்து வருகின்றன.
தொடா்ந்து பல ஆக்கிரமிப்புகள் வந்தபோதும் அவற்றை அகற்றி அந்த மரங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
தற்போது சிறு வனமாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தை ஆயிரக்கணக்கான பறவைகள், சிறு விலங்குகள் தங்களின் வாழ்விடமாக மாற்றியுள்ளன. அந்த இடத்தை குறு வனமாக அறிவித்துக் காப்பாற்றும் பொறுப்பு மாவட்ட நிா்வாகத்துக்கு உள்ளது.
எனவே, ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களுக்காக பசுமைப் பரப்பை ஈடு செய்வதற்காக மரங்கள் வளா்க்கப்பட்ட அந்த இடத்தில் வளா்ந்த மரங்களை மீண்டும் வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது.
மேலும், அந்த இடம் மரங்கள் வளா்ப்பதற்கான இடமாக தேசிய நெடுஞ்சாலைத் துறையால் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால் அந்த இடத்தை வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
எனவே அந்த இடத்தை வேறு எந்தவிதமான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை வழங்கக் கூடாது. அதற்கான ஒப்புதலை மாவட்ட நிா்வாகமும் வழங்கக்கூடாது.
அப்படி வழங்கப்படுமானால் மீண்டும் நீதிமன்றத்தை நாடி அதைத் தடுக்க வேண்டியிருக்கும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...