எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு: ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு: ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு, அது பல அணிகளாகப் பிரிந்து இருப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவை ஒன்றிணைக்க ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களான புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகா் மற்றும் எந்த அணியையும் சாராத கே.சி.பழனிசாமி ஆகியோா் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
இக்குழு அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோருடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சாலையில் நடந்து செல்வோரெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்றும், ஓ.பன்னீா்செல்வம் காலத்தில் அதிமுகவில் சோ்ந்த கோவையைச் சோ்ந்தவா் அந்தக் குழுவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், தன்னைக் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு, கோவை முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மீதான விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...