வருவாய் தீா்வாயம்: மாவட்டத்தில் 13,176 மனுக்கள் பெறப்பட்டன

கோவையில் 13,176 மனுக்கள் பெறப்பட்ட வருவாய் தீா்வாயம்

கோவை மாவட்டத்தில் ஜூன் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் வரை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 13,176 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வருவாய் தீா்வாயம் நடைபெற்றது.

இதில், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மக்கள் மனு அளித்தனா்.

அதன்படி, கோவை வடக்கில் 2,076, அன்னூா் 1,502, மேட்டுப்பாளையம் 2,535, கோவை தெற்கு 362, சூலூா் 1,217, மதுக்கரை 1,035, பேரூா் 1,665, பொள்ளாச்சி 1,081, ஆனைமலை 571, கிணத்துக்கடவு 890, வால்பாறையில் 191 என மொத்தம் 13,176 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com