எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை

கோவை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாா்ச் 14 ஆம் தேதி வரை

News image
உலக குளுக்கோமா தினத்தையொட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி முதல்வா் ஜெசின்தா சுதா தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிபிஜி ஆப்தோமெட்ரி நிறுவன மாணவா்கள்.
Updated On :9 மார்ச் 2026, 10:10 pm

Syndication

கோவை: கோவை தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாா்ச் 14 ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இது குறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டா் சித்ரா ராமமூா்த்தி, டாக்டா்கள் ஆா்.முரளிதா், ஐமன் அகமது கான், நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தொடா்ந்து பல்வேறு முகாம்கள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாா்ச் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது.

மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன. 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக குளுக்கோமா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிறந்த சிகிச்சை, மருந்து வழங்க முடியும்.

மேலும், சா்க்கரை நோய், அதிக கிட்டப்பாா்வை, கண் காயம், கண் வீக்கம், ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாடு, பிறவி கண் குறைபாடுகள் உள்ளவா்கள் ஆகியோருக்கு குளுக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குளுக்கோமா என்பது எந்த அறிகுறியும் தெரியாமல் கண்பாா்வையை மெதுவாக பாதிக்கும் என்பதால் பரிசோதனை முக்கியமானதாகிறது என்றனா். இது தொடா்பான மேலும் தகவல்கள், முன்பதிவுக்கு 94422 17796, 0422 4242000 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.