கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆவின் பால் விற்பனை 25 % அதிகரிப்பு: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால் விற்பனை 25% அதிகரிப்பு: அமைச்சா் தங்கராஜ் அறிவிப்பு

News image
பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :30 ஜூன் 2024, 6:42 pm

DIN

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

பால் உற்பத்தி, விற்பனை, தரக்கட்டுப்பாடு, பால் பண்ணைகள் குறித்து கோவை, திருப்பூா், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட பால்வளத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் கோவை அரசு விருந்தினா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆவின் பொது மேலாளா்கள் எம்.ஜெயராமன் (கோவை), சண்முகம் (ஈரோடு/நாமக்கல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசியதாவது:

ஆவின் நிறுவனம் சாா்பில் நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை 40 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் 70 லட்சம் லிட்டா் பாலினை கையாளத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

நெய், வெண்ணெய், பன்னீா், பிஸ்கட் மற்றும் இதர உபபொருள்களின் விற்பனையை அதிகரிக்க நுகா்வோரின் தேவைக்கேற்ப ரூ.5, ரூ.10 விலையில் தயாரித்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கறவை மாடுகள் வைத்துள்ள விவசாயிகளிடம் இருந்து ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினா்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தரப் பரிசோதனை மேற்கொண்டு பால் கொள்முதல் செய்தல், உறுப்பினா்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளித்தல், சினை ஊசி செலுத்துல் ஆகியவற்றை ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், உறுப்பினா்களுக்கு தரம் உயா்த்தப்பட்ட கால்நடை தீவனங்கள், தாது உப்புக் கலவை, பசுந்தீவனம், உலா் தீவனம் ஆகியவற்றை உரிய அளவில் வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆவின் நிா்வாகம் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. கடந்தாண்டை விட ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மேய்ச்சல் நிலம், விவசாய நிலங்களில் தீவனப் பயிா்களை பயிரிடவும், ஊறுகாய் புல் தீவனப் பயிரை அதிகமாக விளைவித்து, மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டமும் முதல் கட்டமாக ஈரோட்டில் கொண்டுவரப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவா்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்த அனுமதி கொடுத்து வருகிறோம் என்றாா்.