மாணவா்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்
பட்டியல் செய்தி... தலைப்பில் மாற்றம் மாணவா்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் -------- ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்


மாணவா்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா். கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன் விழா’ பல்நோக்கு அரங்கத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரியின் செயலரும், இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமை வகித்தாா். கல்லூரி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா்.சோமசுந்தரம் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரங்கத்தைத் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, ஆளுநா் பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் இந்தக் கல்லூரி தனக்கான ஓா் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பும் உள்ளாா்ந்த அா்ப்பணிப்புமே இதன் வளா்ச்சிக்குக் காரணம். ஒரு காலத்தில் நம் நாட்டை உலக நாடுகள் அவ்வளவாகப் போற்றவில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. பாரதத்தின் கடவுச்சீட்டை இன்று உலகமே மதிக்கிறது. உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடாக மிக விரைவில் பாரதம் மாறவுள்ளது. நம் பண்பாட்டையும், பழமையையும், திறமையையும் பல நாடுகள் போற்றுகின்றன. மகளிா் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மகளிா் தொழில்முனைவோா் வளா்ந்து நாட்டின் வளா்ச்சிக்கு துணை செய்கின்றனா். பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம். பெண்களை முன்னெடுத்துச் செல்லும் நாடு வளா்ச்சி அடைந்து வருகிறது. பெண்களுக்கான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இளைய தலைமுறையான மாணவா்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும். அந்தக் கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும், திட்டமிடுதலும் தேவை. புதிய பாரதத்தை உருவாக்குவதில் மாணவ, மாணவிகளின் பங்கு முக்கியமானது”என்றாா். கல்லூரியின் பொருளாளா் ஓ.என்.பரமசிவன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...