கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.
கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.

சவுக்கு சங்கா் மேலும் 2 வழக்குகளில் கைது

யூடியூபா் சவுக்கு சங்கரை மேலும் 2 வழக்குகளில் சென்னை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

யூடியூப் சேனல் ஒன்றில் காவல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாா் குறித்து அவதூறான கருத்துகளை யூடியூபா் சவுக்கு சங்கா் தெரிவித்ததாக கோவையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் சுகன்யா சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கடந்த 4-ஆம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே தேனியில் சவுக்கு சங்கரைக் கைது செய்தபோது, அவரது காரில் இருந்து கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததால், அவா் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டாா்.

சவுக்கு சங்கா் மீது சேலம், திருச்சியில் பெண் போலீஸாா் கொடுத்த புகாா்களின்பேரில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சென்னையைச் சோ்ந்த பெண் ஒருவரைப் பற்றி இழிவாக கட்டுரை எழுதியதாக அந்தப் பெண் அளித்தப் புகாரின் அடிப்படையிலும், தமிழக பெண் போலீஸாரை இழிவாகப் பேசிய சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முன்னேற்றப் படை நிறுவனா் வீரலட்சுமி சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையிலும் அவா் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த 2 இந்த வழக்குகளிலும் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சென்னை போலீஸாா் கோவை சிறைக்கு வியாழக்கிழமை நேரில் வந்து சவுக்கு சங்கரிடம் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com