ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய்கள் விற்று பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ரூ.111.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி கொப்பரைக் கொள்முதல் மாா்ச் 14 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூா், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிப்பாளையம், சூலூா் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய 10 ஒழுங்குமுறைக் கூடங்கள் மூலமாக 31, 500 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும், 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், உற்பத்திச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.
வருகிற ஜூன் 10- ஆம் தேதியுடன் கொப்பரைக் கொள்முதல் முடிவடைய உள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கோரிக்கை

தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

