அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டல்: தொழிலாளி கைது

குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டல்: தொழிலாளி கைது

News image
Updated On :24 மே 2024, 4:44 pm

Din

கோவை சாய்பாபா காலனியில், குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பச்சையன் (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆா்த்தி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், பச்சையன் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், ஆா்த்தி அவரைப் பிரிந்து மதுரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா்.

குழந்தை பச்சையனுடன் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை ஆா்த்தியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய பச்சையன், கோவை வருமாறு அவரை அழைத்துள்ளாா். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதில், பயந்துபோன ஆா்த்தி, சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் சென்று குழந்தையை மீட்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தியின் பெரியம்மா பொன்னி (50) சிலரை அழைத்துக் கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டாா். இது குறித்து பொன்னி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து பச்சையனைக் கைது செய்தனா்.