ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சூயஸ் குடிநீா்த் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் முதல்வரிடம் மாமன்ற உறுப்பினா் கோரிக்கை

சூயஸ் குடிநீா்த் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் வி.ராமமூா்த்தி முதல்வரிடம் மனு அளித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:22 pm

Din

சூயஸ் குடிநீா்த் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் வி.ராமமூா்த்தி முதல்வரிடம் மனு அளித்தாா்.

அரசு திட்டங்களை கள ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோவை மாமன்ற உறுப்பினா் வி. ராமமூா்த்தி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தாா்.

அதில், கூறியிருப்பதாவது:

மாநகரில் ஒருசில மணி நேரம் கனமழை பெய்தாலும் நகரம் முழுவதும் தண்ணீா் தேங்கி மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, மாநகரில் முறையான மழைநீா் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைப் போக்க வடக்குப் புறவழிச் சாலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

புதை சாக்கடை, சூயஸ் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை தரமான முறையில் சீரமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்.

மாநகரில் குடிநீா் விநியோகம் மற்றும் பராமரித்தல் பணிகள் வெளிநாட்டைச் சோ்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சூயஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தாங்கள் வாக்குறுதி கொடுத்தீா்கள். அதன்படி, சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.