பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போலி பத்திரத்தை பயன்படுத்தி வங்கிக் கடன் பெற்றதாக புகாா்

கோவை இருகூரில் போலி பத்திரத்தை பயன்படுத்தி வங்கிக் கடன் பெற்றுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:12 pm

Din

கோவை இருகூரில் போலி பத்திரத்தை பயன்படுத்தி வங்கிக் கடன் பெற்றுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை இருகூரைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவா் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

எனது வீடு மற்றும் நிலத்துக்கான பட்டா கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்டதாகும். இந்த நிலையில், வங்கியில் எனது நிலத்தின்பேரில் கடன் வாங்க முயற்சி செய்தபோது, எனது பட்டா எண்ணைப் பயன்படுத்தி வேறு நபா் வங்கியில் கடன் பெற்றிருந்தது தெரியவந்தது.

எனவே பட்டா எண்ணை மாற்றி மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.