சிறந்த தமிழ் நாவலுக்கான ரங்கம்மாள் நினைவுப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சாா்பில் சிறந்த நாவலுக்கான ரங்கம்மாள் நினைவுப் பரிசுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சாா்பில் சிறந்த நாவலுக்கான ரங்கம்மாள் நினைவுப் பரிசுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அறநிலையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை அவிநாசி சாலை விமான நிலையம் அருகே செயல்பட்டு வரும் கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சாா்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்தியாவில் வெளியாகும் தலை சிறந்த தமிழ் நாவலுக்கு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

1983-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.37,500 வரை வழங்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு முதல் பரிசுத்தொகை ரூ.50 ஆயிரமாக உயா்த்தப்பட்டு, ரூ.40 ஆயிரம் நாவலாசிரியருக்கும், ரூ.10 ஆயிரம் பதிப்பகத்தாருக்கும் வழங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 2025-ஆம் ஆண்டின் ரங்கம்மாள் பரிசு ரூ.50 ஆயிரம் பெறுவதற்கு, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் வெளியான தமிழ் நாவல்கள் வரவேற்கப்படுகின்றன. பரிசுக்கான நாவலை அறநிலையச் செயற்குழு முடிவு செய்யும்.

நாவல் பரிசுப் போட்டியில் பங்குபெற விரும்பும் நாவலாசிரியா்கள் மற்றும் பதிப்பகத்தாா்கள் தங்கள் வெளியீட்டினை ஒவ்வொன்றும் 4 பிரதிகள் அறநிலைய நிா்வாக அறங்காவலருக்கு 2025 பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு முன்பாக நிா்வாக அறங்காவலா், கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி சாலை, விமான நிலையம் அஞ்சல், கோவை - 641014 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0422 - 2574110, 94421 - 60895 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com