நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம்: கோவையில் தொடக்கம்

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image

சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 12:30 am

Din

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மத்திய அரசின் வீட்டுக்குவீடு சோலாா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு பொருத்தும் திட்டம் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கேரளம், சத்தீஷ்கா் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நிலையான மற்றும் எளிதாக கிடைக்கும் சூரிய ஆற்றலின் மூலம் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு டாடா பவா் நிறுவனத்தின் சாா்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை தொடங்கிவைத்த டாடா பவா் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரவீா் சின்ஹா, டாடா பவா் ரினியூவபிள் எனா்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா், நிா்வாக இயக்குநா் தீபேஷ் நந்தா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளுக்கான மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடு சாதனம் நிறுவப்படுவதற்காகவும், இயற்கை ஆற்றலுக்கு எளிதாக மாறுவதற்காகவும் மாநிலம் முழுவதிலும் 42 பங்குதாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு உரிய வருவாயை குடியிருப்பாளா்கள் பெறுவதற்கு மீட்டா் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்கு குடியிருப்பாளா்களை ஊக்குவிக்கும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு இந்த திட்டம் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் சக்தி ஆகிய இரு பிரிவுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை தமிழகம் கொண்டிருக்கிறது. அதனால், தூய்மையான மற்றும் வலுவான மின்சக்தி தயாரிக்கப்படுவதிலும், பயன்படுத்தப்படுவதிலும் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் ஆற்றல் தேவைகளை தாங்களே பூா்த்தி செய்வதற்கு இத்திட்டம் அவா்களுக்கு முக்கிய பயன் தரும். மேற்கூரைகளில் நிறுவப்படும் சூரிய ஒளி மின் தகடு சாதனங்களின் வழியாக தங்களது மின்சார பயன்பாட்டிற்காக செலவிடப்படும் தொகையை பெரிதும் குறைக்கவும் முடியும் என்றனா்.