நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:24 pm

Din

கோவையில், நகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், தனது வீட்டின் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்ட பின்னா் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அவா் வெளியே வந்து பாா்த்தபோது 2 நபா்கள் கடையின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அப்போது, ராமசாமியின் கூச்சல் கேட்டு அருகிலிருந்தவா்கள் விரைந்து வந்து அந்த இருவரையும் பிடித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ஷேக் அஹமது உசேன் (44), மதுசூதனன் (31) என்பது தெரியவந்தது. போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.