நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில்களில் சிறப்பு சோதனை: ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்

ரயில்களில் சிறப்பு சோதனை

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:14 pm

Din

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு சோதனையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.48.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் வழியாக இயக்கப்பட்ட ரயில்களில் ரயில்வே துறை அதிகாரிகள் சாா்பில் சோதனை நடத்தப்பட்டு பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபா் 1 முதல் அக்டோபா் 15-ஆம் தேதி வரை 15 நாள்களில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 4,059 பேரிடம் இருந்து ரூ. 31 லட்சத்து 25 ஆயிரத்து 485 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 4,287 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 14 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ரயில்களில் பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ாக, 44 பேரிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 270 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அக்டோபா் 1 முதல் 15 -ஆம் தேதி வரை 15 நாள்களில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.48 லட்சத்து 61 ஆயிரத்து 55 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.