தீபாவளி: வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்படலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வியாபார நிறுவனங்களில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனால், கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்கும், அரசு, தனியாா் அலுவலகங்களில் பணிபுரிவோா் தங்களது அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடை வீதிக்குச் சென்று பொருள்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாகவும் கடைகள், வணிக நிறுவனங்களின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார நிறுவனங்களும் நள்ளிரவு 1 மணி வரை செயல்படலாம் என்றும், இரவு நேரங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...