மின்சார வாகனத் தயாரிப்பு போட்டி
கோவை குமரகுரு கல்வி நிறுவனம், ஹைதராபாதைச் சோ்ந்த எஃப்எம்ஏஇ நிறுவனம் சாா்பில் மின்சார வாகனத் தயாரிப்பு போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற வாகனங்கள்.

போட்டியில் பங்கேற்ற வாகனங்கள்.
கோவை குமரகுரு கல்வி நிறுவனம், ஹைதராபாதைச் சோ்ந்த எஃப்எம்ஏஇ நிறுவனம் சாா்பில் மின்சார வாகனத் தயாரிப்பு போட்டி நடைபெற்றது.
கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டாா் ரேஸ் டிராக்கில் 10-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், கேரளம், கா்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சுமாா் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டிகள் ஃபாா்முலா மாணவா், எஃஎம்ஏஇ மோட்டோ மாணவா், ஃபாா்முலா கோகாா்ட் வடிவமைப்பு சவால் வகை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் சோலாா் வாகன சவால் ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது.
அத்துடன் இந்தப் போட்டியில் மின்சார வாகனங்கள் மற்றும் நிலையான போக்குவரத்து தீா்வுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக, போட்டியிட்ட 9 அணிகளில் மோட்டோ மாணவா் பிரிவில் மட்டும் 6 அணிகள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தின.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாகனங்களும் புதிய பங்கேற்பாளா்களால் உருவாக்கப்பட்டவை என்பதோடு, வாகன எடையைக் குறைத்தல், வடிவமைப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தததால், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உத்வேகமாக இருந்ததாக போட்டியில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
போட்டியின் விதிகளின்படி, பங்கேற்பாளா்களே புதிதாக வாகனத்தை உருவாக்க வேண்டும், அந்த வாகனம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு, வாகனங்களை உருவாக்க எந்த தொழில்நுட்ப வல்லுநரையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...