கோவையில் 3 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
கோவையில் 3 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

வருமானவரித் துறை சோதனை நடைபெற்ற தொழிலதிபா் பொன்னுதுரையின் சிங்காநல்லூா் வீடு.

வருமானவரித் துறை சோதனை நடைபெற்ற தொழிலதிபா் பொன்னுதுரையின் சிங்காநல்லூா் வீடு.
கோவையில் 3 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கோவை, சிங்காநல்லூா் சென்டிரல் ஸ்டுடியோ சாலை பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் பொன்னுதுரை வீட்டுக்கு புதன்கிழமை காலை திடீரென வந்த 5-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அவரிடம் நிறுவனம் தொடா்பான வரவு-செலவு விவரங்களைக் கேட்டறிந்து சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக சோதனை நடத்தினா்.
இதேபோல, உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழில் அதிபா் வரதராஜன் என்பவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அத்துடன் டாடாபாத் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தொழில் நிறுவனத்திலும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஹாா்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து வருமான வரித் துறையினா் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவனின் அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றுவரும் வருமான வரித் துறையினரின் சோதனையைத் தொடா்ந்து, கோவையில் அவருக்கு நெருக்கமானவா்களிடம் சோதனை நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...