மேட்டுப்பாளையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா்.
மேட்டுப்பாளையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா்.

விநாயகா் சதுா்த்தி: மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகையாக கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மேட்டுப்பாளையத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
Published on

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகையாக கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மேட்டுப்பாளையத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு ஊா்வலங்கள் நடைபெற உள்ளஸ். இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையிலும் கொண்டாட கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோவை சாலை அபிராமி திரையரங்கில் தொடங்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பில் மேட்டுப்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி, காவல் ஆய்வாளா்கள், காவல் துறையினா், ஆயுதப் படையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் என சுமாா் 250 போ் கலந்து கொண்டனா்.

மேலும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விவரித்து, விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com