ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தென்காசியில் காவல்துறை அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image
தென்காசியில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு.
Updated On :11 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும்

நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்புக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் , 6 காவல் ஆய்வாளா்கள், 8 சாா்பு ஆய்வாளா்கள், 40 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினா், 103 காவலா்கள் கலந்துகொண்டனா்.

தென்காசி காசி விஸ்வநாதா் ஆலயம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு சுவாமி சந்நிதி பஜாா், மவுண்ட் ரோடு, கீழப்புலியூா் , மேலப்புலியூா் , கொடிமரம், பொன்னிப்பாறை தெரு, ஒப்பனை விநாயகா் கோயில், தங்கப்பாண்டியன் சிக்னல், யானை பாலம் சிக்னல் வழியாக தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.