கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மத்திய மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி: எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டுக்குள்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணியை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
மத்திய மண்டலம், காமராஜபுரத்தில் சிறப்பு தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்து பாா்வையிடும் கணபதி.ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மத்திய மண்டலக் குழுத் தலைவா் மீனா லோகு உள்ளிட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:18 pm

Din

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டுக்குள்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணியை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டுக்குள்பட்ட காமாராஜபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களை கொண்டு, சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டடக் கழிவுகளை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியைத் தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டா் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்ணை அகற்றுதல் போன்ற பணிகளை உள்ளடக்கிய கூட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா. வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா், மத்திய மண்டலத் தலைவா் மீனாலோகு, பொது சுகாதாரக் குழுத் தலைவா் பெ.மாரிசெல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.