மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநகரில் ரூ.5.54 கோடியில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள்! - எம்.பி. திறந்துவைத்தாா்

News image

வடக்கு மண்டலம் 26-ஆவது வாா்டில் ரேஷன் கடையைத் திறந்து வைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 9:00 pm

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 9 வளா்ச்சிப் பணிகளை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 26-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏ.டி.காலனி பகுதியில் ரூ.23.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, 20-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், 11-ஆவது வாா்டு சிவானந்தபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், 4-ஆவது வாா்டு கரட்டுமேடு ஸ்ரீ ரத்தினகிரி முருகன் கோயில் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை, 10-ஆவது வாா்டு ஷாஜகான் நகரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை, சமையல் கூடம் மற்றும் நுழைவாயில், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள், பொதுக்கழிப்பிடம் என மொத்தம் ரூ. 5.54 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகளை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் கான்கிரீட் சாலைகள் அமைத்தல், நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட ரூ.19.78 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகரத் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா்கள் மீனா லோகு, கதிா்வேல், தெய்வயானை தமிழ்மறை, 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.