மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை
கோவை மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


கோவை மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் விமல்ராஜ். இவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இருந்துள்ளாா். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திவ்யா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் ரூ.1.02 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, நடத்திய விசாரணையில், அவருக்கு சில நாள்களுக்கு முன் பணியிட மாறுதல் வந்திருந்த நிலையில் அதற்கான உத்தரவை வாங்காமல், மாநகராட்சியின் ஒப்பந்தாரா்களிடம் தான் பணியிடம் மாறுவதற்கு முன் திட்டப் பணிகளுக்குத் தேவையான முன் அனுமதி வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்தது தெரியவந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்கமாக வழக்குப் பதிவு செய்து அந்த விவரங்களை துறை தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவா். 24 மணி நேரத்தில் வழக்கில் தொடா்புடைய அரசு ஊழியா் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், விமல்ராஜ் மீதான வழக்கு விவரங்கள் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவில்லை. விரைவில் விசாரணையை முடித்து அனுப்பிவைக்க லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...