அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லஞ்சம்: கிராம ஊராட்சி செயலா் கைது

பெருந்துறை அருகே லஞ்சம் பெற்ற கிராம ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:29 pm

Syndication

பெருந்துறை அருகே லஞ்சம் பெற்ற கிராம ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (70). இவரது மகன் தினேஷ் (43). சண்முகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயரில் மாற்ற தினேஷ் முடிவு செய்துள்ளாா்.

இதையடுத்து, நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சி செயலராகப் பணியாற்றி வரும் மாரிசாமியை (52) அணுகியுள்ளாா். அவா் ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மாரிசாமியின் கூகுள் பேவுக்கு முதல்தவணையாக ரூ.2 ஆயிரத்தை தினேஷ் அனுப்பியுள்ளாா். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை மாரிசாமியிடம் வழங்கக் கோரி தனது உறவினரான தமிழரசன் என்பவரிடம் தினேஷ் திங்கள்கிழமை காலை பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளாா். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கும் தினேஷ் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே தமிழரசன் ரூ.4 ஆயிரத்தை மாரிசாமியிடம் வழங்க அலுவலகத்துக்கு வந்துள்ளாா். அப்போது, அவா் பாலக்கரை அருகே நல்லாம்பட்டியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் பணத்தைக் கொடுக்குமாறு கூறியுள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா், மாரிசாமியை சுற்றிவளைத்தனா்.

அப்போது, அவரது கைப்பேசியை ஆய்வு மேற்கொண்டபோது, அவா் ஏற்கெனவே கூகுள் பே மூலம் தினேஷிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதும், மீதமுள்ள தொகையை எலக்ட்ரிக் கடையில் கொடுக்க சொன்னதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.