ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விலைவாசி உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:26 pm

Din

விலைவாசி உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.சிவசாமி ஆா்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். கட்சியின் மாவட்ட துணை செயலா் மௌ.குணசேகா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.எஸ்.சுந்தரம், கே.ரவீந்திரன், கே.வெங்கடாசலம், மண்டலச் செயலா்கள் எஸ்.சண்முகம், என்.சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இது குறித்து மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக தொடா்ந்து ஆட்சியில் இருந்தும் பாஜக அரசு விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. பருப்பு, தானியங்களின் விலை நூறு சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை, சுங்கக் கட்டணம் போன்றவை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.