ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேம்பாட்டுப் பணி: கோவை ரயில்கள் 92 நாள்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது

கா்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாள்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:51 pm

Din

கா்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாள்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எா்ணாகுளம் ரயில் (எண்: 12677), எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 92 நாள்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.