உழவா் தின விழா கண்காட்சியில் இடம்பெற்ற தானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை, வெல்லத்தால் உருவாக்கப்பட்டுள்ள தோ்.
உழவா் தின விழா கண்காட்சியில் இடம்பெற்ற தானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை, வெல்லத்தால் உருவாக்கப்பட்டுள்ள தோ்.

வேளாண்மையை நவீனமயமாக்குவதே அரசின் முதன்மையான நோக்கம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாட்டில் வேளாண்மையை நவீனமயமாக்குவதே அரசின் முதன்மையான நோக்கம் என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.
Published on

தமிழ்நாட்டில் வேளாண்மையை நவீனமயமாக்குவதே அரசின் முதன்மையான நோக்கம் என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவா் தின விழாவின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று வேளாண் கண்காட்சியைத் திறந்துவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ‘வேளாண் செம்மல் விருது’ வழங்கி கௌரவித்தாா்.

விழாவில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, கிராமப்புற பெண் வேளாண் தொழில்முனைவோா், இளைஞா் வேளாண் சாதனையாளா்களின் விவரங்கள் அடங்கிய நூல் தொகுப்பை வெளியிட்டாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் விவசாயிகளுக்கு புதிய பயிா் ரக தொகுப்புகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

வேளாண்மைத் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் முக்கியக் காரணமாக உள்ளது.

கரும்பு, நெல், கடலை, இதர மர வகைகள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், வேளாண் துறையில் இன்னும் பல தொழில்நுட்பங்களைக்கொண்டு நவீனமயமாக்குதல், வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துதல் ஆகியவையே இந்த அரசின் முதன்மையான நோக்கங்களாக உள்ளன.

இதற்காக, ஆஸ்திரேலியா வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

அமைச்சா் சு.முத்துசாமி பேசுகையில், தமிழக முதல்வா் கொண்டுவந்துள்ள எல்லாத் திட்டங்களுமே ஏதாவது ஒரு வகையில் விவசாயக் குடும்பங்களுக்கு பயனுள்ளதாகவே அமைந்துள்ளது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பல்கலைக்கழகத்தில் 4 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் உழவா்கள் அதிக அளவில் பங்கேற்று, வேளாண் சாகுபடியில் புதிய உத்திகள், நவீன இயந்திரங்கள் போன்றவற்றைப் பாா்வையிட்டு தங்கள் வயல்களில் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் என்றாா்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், திமுக ஒவ்வொரு முறை ஆட்சிப் பொறுப்பேற்றதும் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்கனை தள்ளுபடி செய்து வருகிறது. மேலும், விவசாயிகளை கடனிலிருந்து மீட்டெடுத்து, அவா்களது வேளாண்மைத் தொழிலை சிறப்படையச் செய்யும் திட்டங்களைத் தீட்டி வருகிறது என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com