ராம் நகா் ராமா் கோயிலில் மாா்கழி மாத சொற்பொழிவு இன்று தொடக்கம்

கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானத்தில் மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 16) தொடங்குகிறது.
Published on

கோவை: கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானத்தில் மாா்கழி மாத ஆன்மிக சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 16) தொடங்குகிறது.

ராம் நகா் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், கோவை திருப்பாவை சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனா். இந்த ஆண்டு 67-ஆம் ஆண்டு மாா்கழி மாத திருப்பாவை நிகழ்ச்சியை திருக்குடந்தை உ.வே.வேங்கடேஷ் நடத்துகிறாா். இந்நிகழ்ச்சி டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் ராமா் கோயில் பிரவசன மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவா் குழுத் தலைவா் என்.வி.நாகசுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிவைக்கிறாா். வரும் ஜனவரி 1-ஆம் தேதி காலை ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதாக திருப்பாவை சங்கத்தின் செயலா் டி.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com