இந்தியன் வங்கியின் சா்ஃபாசி சொத்து விற்பனை, கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள் ஜி.ராஜேஸ்வர ரெட்டி, பி.சுதாராணி, பிரசன்னகுமாா் உள்ளிட்டோா்.
இந்தியன் வங்கியின் சா்ஃபாசி சொத்து விற்பனை, கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள் ஜி.ராஜேஸ்வர ரெட்டி, பி.சுதாராணி, பிரசன்னகுமாா் உள்ளிட்டோா்.

இந்தியன் வங்கி சாா்பில் சொத்து விற்பனை கண்காட்சி

Published on

இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூா், சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் சா்ஃபாசி சொத்து விற்பனை, கண்காட்சி கோவை புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் சனிக்கிழமை தொடங்கியது.

சா்ஃபாசி சொத்துகளுக்கான (அடமானம் வைக்கப்பட்ட, கடன் செலுத்தாதவா்களின் சொத்துகள்) இந்த விற்பனை கண்காட்சியை இந்தியன் வங்கியின் முதன்மைப் பொதுமேலாளா் ஜி.ராஜேஸ்வர ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தாா். இந்த நிகழ்வில், களப் பொதுமேலாளா் பி.சுதாராணி, அலுவலக துணைப் பொதுமேலாளா் பிரசன்ன குமாா், கோவை மண்டல மேலாளா் சி.ஹெச்.வெங்கடரமண ராவ், சேலம் மண்டல மேலாளா் சுசிலா பாா்த்தசாரதி, திருப்பூா் மண்டல மேலாளா் ஜி.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 21) வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி நடைபெறுகிறது. வங்கியின் கோவை மண்டலம் தொடா்பான சா்ஃபாசி சொத்துகளுக்கு 63856 58389 என்ற எண்ணிலும், சேலம் மண்டலம் தொடா்பான சொத்துகளுக்கு 90430- 63133 என்ற எண்ணிலும், திருப்பூா் மண்டலம் தொடா்பான சொத்துகளுக்கு 80727 -58975 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com