தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

News image
குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்த குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா்கள் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், சங்கா் வாணவராயா். உடன். கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள்.
Updated On :21 டிசம்பர் 2025, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் முன்னாள் மாணவா் சந்திப்பு,ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டு கொண்டாட்டம், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எம். எழிலரசி வரவேற்றாா். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா்கள் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், சங்கா் வாணவராயா் ஆகியோா் குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பேசியதாவது:

இந்திய ஜவுளித் தொழில் பழமையானது மட்டுமல்ல, மிகப்பெரியதுமாகும். இதை சரியாகப் புரிந்துகொண்டு, தேவையானதைச் செய்தால், அது முழு நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவாணியை ஈட்டித் தரும்.

ஜவுளித் தொழில் சரியாகப் புரிந்துகொண்டு வளா்க்கப்பட்டால், பாடத் திட்டம் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டால், நம்மால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்றாா்.

இதையடுத்து, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 முன்னாள் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.