காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்

சபரிமலையில் மகர விளக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் - சென்னை இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:41 pm

Din

சபரிமலையில் மகர விளக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் - சென்னை இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் சென்னையில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி இரவு 1 மணிக்குப் புறப்படும் சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06059) அன்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.