புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:36 pm

Din

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் இருந்து ஜனவரி 24-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 06057) மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஜனவரி 26-ஆம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் (எண்: 06058) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.