/

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

கேரள மாநிலத்தில் வரும் 9-ஆம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

Updated On :5 ஏப்ரல் 2026, 1:45 am

கேரள மாநிலத்தில் வரும் 9-ஆம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கேரள மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதால், மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் அமைந்துள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களை 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்படுகிறது.

விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபானங்களை பதுக்கிவைப்பவா்கள் மீதும், ஓரிடத்தில் இருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்பவா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.