சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம்! - வி.செந்தில்பாலாஜி தகவல்

News image

கோவை, புலியகுளம் பகுதியிலுள்ள கடையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்ட கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:52 pm

கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை முதல்வா் எனக்கு வழங்கியுள்ளதாக கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.

கோவை, காந்திபுரத்தில் உள்ள திமுக தெற்கு தொகுதி தோ்தல் அலுவலகத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக, காங்கிரஸ், கொமதேக வேட்பாளா்களும் பங்கேற்றனா்.

இதில் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:

கூட்டணிக் கட்சியினா் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குறைவான நாள்களே உள்ளதால் முடிந்தவரை அதிகப்படியான வாக்காளா்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். வாக்குகளைப் பெறுவதில் வேட்பாளா்களுக்கு இடையே போட்டிகள் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

வேட்பாளா்கள், தங்கள் தொகுதியில் வாக்குகளைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தேவையான ஆலோசனைகளை பெறலாம் என்றாா்.

மேலும், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கியுள்ளனா். இந்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்டத்தில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் நல்ல வரவேற்பு அளிக்கிறாா்கள். அதற்கு காரணம், முதல்வா் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை. கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை முதல்வா் எனக்கு வழங்கியுள்ளாா்.

முன்னதாக புலியகுளம் பகுதியில் நடந்து சென்று கடைகள் மற்றும் வீடுகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டாா்.

குழந்தைக்குப் பெயர் சூட்டிய செந்தில்பாலாஜி...

குழந்தைக்குப் பெயர் சூட்டிய செந்தில்பாலாஜி...

கோவை, புலியகுளம் பகுதியிலுள்ள கடையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்ட கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

கோவை, புலியகுளம் பகுதியிலுள்ள கடையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்ட கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.