திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜி காந்திபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவைக்கு தங்க நகை பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, செம்மொழி பூங்கா, ஹாக்கி மைதானம், பெரியாா் நூலகம் என பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா். கோவை தெற்குத் தொகுதியில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை தோ்தலில் வெற்றி பெற்ற பின்பு உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்போம். கரூரைச் சோ்ந்த 18 போ் கோவை தெற்கில் போட்டியிடுவதாகக் கூறுகின்றனா். சுயேச்சையாக போட்டியிடுவது அவா்கள் விருப்பம். தோ்தல் களத்தைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறியே வாக்குகள் சேகரித்து வருகிறோம். பாஜகவினா் பத்திரிகையாளா்களை சந்திக்கும் போது, கோவைக்கு என்ன திட்டங்கள் செய்தாா்கள் என்பதை சொல்ல முடியுமா?
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில், புள்ளிவிவரங்கள் தவறாக கொடுத்திருந்தால், கொடுத்த போது அதை சரிசெய்து வாங்கியிருக்க வேண்டும். பல நாள்களாக நிலுவையில் வைத்து அதை நிராகரிப்பது சரியல்ல என்றாா்.
தொடர்புடையது

கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம்! - வி.செந்தில்பாலாஜி தகவல்

திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் கோவைக்கான வாக்குறுதிகள் ஓரிரு நாள்களில் வெளியாகும்: தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி தகவல்

திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரியுங்கள்: மு.அப்பாவு அறிவுறுத்தல்

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


