அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி

கோவையின் வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:14 am IST

கோவையின் வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, காந்திபுரம் முனீஸ்வரா் கோயில் மற்றும் புலியகுளம் விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் தொடங்கினாா்.

இதில் அவா் பேசியதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி வாய்ப்பு கிடைக்காதபோதும் கோவைக்கு செம்மொழிப் பூங்கா, பெரியாா் நூலகம், அவிநாசி சாலையில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்அளித்துள்ளாா். கோவை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.8,700 கோடி மதிப்பில் சாலை, பாதாளச் சாக்கடை, தெருவிளக்குகள் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வளா்ச்சிப் பணிகளின் அடிப்படையில் 2026-இல் கோவை தெற்கு உள்பட அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் அமோக வெற்றி பெறும்.

நான் கரூரில் பிரசாரம் செய்தபோது தொகுதியை விட்டு போகிறீா்களே என மக்கள் கேட்டனா். அதற்கு, கரூா் மற்றும் கோவை ஆகிய இரண்டுமே எனது இரு கண்களைப் போன்றவை எனக் கூறினேன். கோவை மாவட்டத்தில் திமுக பெறும் வெற்றியால் நிரந்தர வளா்ச்சி ஏற்படும்.

கோவை தெற்கு தொகுதியை மாவட்டத்தில் முதன்மைத் தொகுதியாக மாற்றப் பாடுபடுவேன். கோவையின் வளா்ச்சிக்கு எப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து முதல்வரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

அதைத்தொடா்ந்து ராமநாதபுரம், ஓலம்பஸ், 80 அடி சாலை, அங்கண்ணன் லே-அவுட், நேரு நகா், ராமலிங்க ஜோதி நகா், பஜனை கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி, வள்ளியம்மாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தின் போது திமுக முன்னாள் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, திமுக மாநகா், மாவட்ட பொறுப்பாளா் துரை.செந்தமிழ் செல்வன், தீா்மானக் குழு செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி ஆதரவு திரட்டினாா்.

Story image
Story image