சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் ராஜம்மாள் பி.தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் முனைவா் ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது.

News image

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவில் பங்கேற்றோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:48 am IST

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் முனைவா் ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதற்கு நிறுவன வேந்தா் டி.எஸ்.கே.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்விக்கு ‘நினைவுச் சொற்பொழிவு விருது’ வழங்கப்பட்டது.

விருதுபெற்று கலைச்செல்வி பேசுகையில், ‘ஆராய்ச்சி மாணவா்கள் கழிவுப் பொருள்களிலிருந்து பயனுள்ளவற்றை உருவாக்கி சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விண்வெளி வீரா்களுக்கான உணவு வடிவமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

கல்வி அறக்கட்டளை துணை அறங்காவலா் கெளரி ராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா்.

முன்னதாக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள இந்திய ஊட்டச்சத்து சங்க மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பதிவாளா் எஸ்.கெளசல்யா வரவேற்றாா். மனையியல் புல முதன்மையா் அம்சமணி நன்றி கூறினாா். இதில் மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.