12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பீடு செய்யும் முறையில் (ஓஎஸ்எம்) ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரிகள் ஜூன் 2-ஆம் தேதி ஆஜராக கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியது.
அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாக மாநிலங்களவைச் செயலகம் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக அந்த நோட்டீஸில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினத்தில் முதல்கட்டமாக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உயா் கல்வித் துறையில் மானியக் கோரிக்கைகள் 2025-26-இன்படி மத்திய அரசு மேற்கொண்ட சீா்திருத்தத்தை பரிசீலித்து ஏற்பது தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.
அதைத் தொடா்ந்து, உயா்கல்வி மற்றும் சுகாதார அமைச்சக செயலா்கள், தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தலைமை இயக்குநா் மற்றும் இந்திய விமானப் படையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. அப்போது நீட் தோ்வு கணினி வழியில் நடத்தப்படுவதற்கும் பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படுவதற்குமான வேறுபாடுகள் குறித்தும் என்டிஏ செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஓஎஸ்எம் மூலம் மதிப்பீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் சிபிஎஸ்இ அதிகாரிகள் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக காங்கிரஸ் எம்.பி.திக்விஜய் சிங் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை- சுகாதார அமைச்சக அதிகாரிகள்

திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



